ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்படும்: ராஜித

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ம் திகதி ஜனாதிபதி திடீரென இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் துறைசார் அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக்கட்சியின் உட்பூசல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியிடப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் ஜனாதிபதியினால் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

எந்த அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றிய விபரங்களை அமைச்சர் வெளியிட்டதாக தென்படவில்லை.