பேருந்து சாரதியாக மாறிய சஜித் பிரேமதாஸ!

Report Print Vethu Vethu in அரசியல்

பேருந்து ஒன்றின் சாரதியாக நேற்றைய தினம் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ செயற்பட்டுள்ளார்.

கண்டி, திகன - ராஜவெல்ல இந்து பாடசாலைக்கு 46 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பேருந்தின் சாரதி ஆசனத்தில் அமர்ந்த அமைச்சர் சாரதியாக செயற்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையின் மாணவர்கள் சிலரையும் எற்றிக் கொண்டு பேருந்தை ஓட்டி செல்ல அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

நாடாளவிய ரீதியில் பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்திற்கும் அதிகம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை கொடுப்பதற்கு தான் முயற்சித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers