தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் கபீர் ஹாசிம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து, அமைச்சர் கபீர் ஹாசிமை நீக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில நாட்களாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்தும் முன்வைத்து வரும் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் கபீர் ஹாசிம், தவிசாளர் பதவியின் பொறுப்பை கவனத்தில் கொள்ளாது செயற்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமைச்சர் கபீருக்கு சுயாதீனமாகவும், நடு நிலையாகவும் செயற்பட்டிருக்க முடியும் என்ற போதிலும் அவர் முற்றாக பதவியின் பொறுப்புக்கு முரணாக குழுக்களை ஏற்படுத்தி, கட்சியை பிளவுப்பிடுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சி அணிகளுடன் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி, கட்சிக்கு எதிராக சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனால், அவரை கட்சியின் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய கபீர் ஹாசிமை தவிசாளர் பதவியில் நீக்க, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை பதவி நீக்கியதும் ஏற்படும் வெற்றிடத்திற்கு அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.