குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டும்: ஞானசார தேரர்

Report Print Kamel Kamel in அரசியல்
317Shares

நாட்டில் குடும்ப ஆட்சியை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை பிரதேசத்த்தில் இன்றைய தினம் நடைபெற்ற அந்த அமைப்பின் இளைஞர் பேரவை அமர்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கட்சி, நிறம், சின்னங்கள் போன்றவற்றை கைவிட்டு விட்டு தேசத்திற்காக ஒன்றிணைய வேண்டும்.

கட்சிகளின் தலைவர்களை தெரிவு செய்து பௌத்த பிக்குகளின் பணியல்ல, நாட்டை கட்டியெழுப்பக் கூடிய தலைவர்களை தெரிவு செய்தலாகும்.

பரம்பரை பரம்பரையாக செல்லும் குடும்ப ஆட்சி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். திறமைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய ஓர் தலைமுறையை உருவாக்க வேண்டும்.

பொதுபல சேனா தேசிய வேலைத் திட்டமொன்று முன்னெடுப்பதாகவும் கட்சி சின்னங்களை மறந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.