சஜித் தொடர்பில் சம்பந்தன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான எந்தவொரு அழைப்பையும் அமைச்சர் சஜித் பிரேமதாச இதுவரை விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “இற்றைவரை அமைச்சர் சஜித்திடமிருந்து எந்தவொரு அழைப்பும் விடைக்கவில்லை”

அதேபோன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்த கலந்துரையாடலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது. ஆகவே, அவர்களுடன் கட்டாயம் பேச்சு நடத்துங்கள்" என்று சஜித்துக்குப் பிரதமர் ரணில் ஆலோசனை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், விரைவில் கூட்டமைப்பினரை சஜித் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.