அரசாங்கம் வீடு செல்ல ஆயத்தமாகின்றது

Report Print Kamel Kamel in அரசியல்

அரசாங்கம் வீடு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொஸ்கம சலாவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கான மக்கள் சக்தி வலுவிழந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இவர்களின் பங்களிப்பு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் நீடிக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் படு தோல்வியடைந்த அரசாங்கம் தற்பொழுது செல்லாக்காசாக மாறியுள்ளது.

எனினும், ஆட்சிப் பொறுப்பினை கைவிடுவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Latest Offers