சஜித் பிரேமதாச இன்று கூட்டமைப்பை சந்திக்கின்றார்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் இது பற்றிய தகவலை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்றைய சந்திப்பில் விரிவாக ஆராயப்பட உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சஜித் தரப்பினர் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்த சந்திப்பு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஏனைய சிறுபான்மை கட்சிகளுடன் சஜித் கலந்துரையாடியுள்ளார்.