கட்சியின் அங்கத்துவத்தை இழக்கும் ஐவரின் விபரங்கள் வெளியானது

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரது கட்சியின் அங்கத்துவத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனக் கட்சியின் அங்கத்தவத்தை பெற்றுக் கொண்ட டிலான் பெரேரா மற்றும் எஸ்.பி. திசாநாயக்க, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் லக்ஷமன் யாப்பா அபேவர்தன ஆகியோரினது கட்சியின் அங்கத்துவத்தையே இவ்வாறு இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் விஜித் விஜயமுனி சொய்சா மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரினது கட்சி அங்கத்துவத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.