கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றி! சஜித் பிரேமதாச அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பாரிய வெற்றியளித்துள்ளது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் சஜித் தரப்பினர் விசேட பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் நிறைவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவருக்கும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.