இணையத்தில் வைரலாகும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை

Report Print Jeslin Jeslin in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிறுவயது கதை ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்று வந்துள்ளார்.

அச்சமயம், தற்போது வசிக்கும் அதே பகுதியில் பாடசாலைக்கு மிக அருகிலேயே அவர் வசித்து வந்துள்ளார்.

பாடசாலைக்கு மிக அருகே வீடு என்றாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காரில் சென்று வருவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

எனினும், பாடசாலையில் உள்ள சில மாணவர்கள் இதனை விரும்பவில்லை.

இதன் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வந்த காரின் ரயர்களை அவர்கள் வெட்டி விட்டனர், இருப்பினும் அந்த ரயர்களை சரிசெய்துக் கொண்டு இரண்டாவது நாள் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

அதே மாணவர்கள் இரண்டாவது நாளும் ரயர்களை வெட்டினர். ரணில் மீண்டும் ரயர்களை சரிசெய்து மூன்றாம் நாள் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

தொடர்ந்து பத்து நாட்கள் காரின் ரயர் சேதமாக்கப்பட்டது. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல் பாடசாலை சென்று வந்துள்ளார் ரணில்.

அதன் பின்னர் 11ஆம் நாள் அந்த காரின் ரயர்களை யாருமே சேதப்படுத்தவில்லையாம்.

பல வருடங்கள் கடந்த பின்னும் தற்போது அரசியல் களத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்ளும் சிக்கல்களை இதே போன்றே அவர் முறியடித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.