ரணிலை சந்தித்த கனிமொழி

Report Print Ajith Ajith in அரசியல்

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மகளுடைய திருமணத்துக்காக இலங்கை வந்திருந்த தமிழக அரசியல்வாதியும் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதியின் மகளுமான கனிமொழி நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீன்பிடித்துறை ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி ஆகியோரும் பிரதமருடன் இருந்தனர்.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் தாக்கப்படுவதும் கைதுசெய்யப்படுவதும் தொடர்பாக இந்த சந்திப்பின்போது கனிமொழி தமது கருத்துக்களை முன்வைத்தார்.