விரைவில் சஜித் தொடர்பான அறிவிப்பு வெளிவரும்

Report Print Jeslin Jeslin in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாச வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர சமஷ்டி கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த சஜித் பிரேமதாச தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளுடைய ஆதரவை பெற்றுவிட்டோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.