நாட்டிற்குள் பயங்கரவாத நிதிகள் வரத் தொடங்கியுள்ளமைக்கு இதுவே காரணம்?

Report Print Kamel Kamel in அரசியல்

நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்வரும் தேர்தலை தடுக்கும் நோக்கில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் போன்றதொரு சம்பவத்தை நடத்தி நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

அந்நிய செலாவணி குறித்த சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்ட காரணத்தினால் நாட்டுக்குள் பயங்கரவாத நிதிகள் வரத் தொடங்கியுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட உள்ளது. இதில் அரசாங்கம் நிச்சயமாக தோல்வியைத் தழுவும்.

பாதுகாப்புப் படையினரை பலவீனப்படுத்தி வரும் அரசாங்கம் கடற்படையினரின் மனோ திடத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் போன்றதொரு சம்பவத்தை அரங்கேற்றி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.