நிதி அமைச்சை தம்மிடம் ஒப்படைத்தால் சுலபமாக தீர்வு காண முடியும்! தயா கமகே

Report Print Kamel Kamel in அரசியல்

நிதி அமைச்சின் பொறுப்புக்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டால் பொருளாதார பிரச்சினைக்கு சுலபமாக தீர்வு காண முடியும் என ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்றைய தினம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சினால் தம்மால் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுபவசாலி எனவும், அவரிடம் ஏதேனும் ஓர் விடயத்தை சொன்னால் அதனைப் புரிந்து கொள்வார் அதற்கு தடை ஏற்படுத்த மாட்டார்.

எனினும், அந்த விடயத்தை நிதி அமைச்சிடம் கொண்டு செல்லும் போது அதற்கு அமைச்சின் அதிகாரிகள் பல்வேறு தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றனர்.

எம்மிடம் நிதி அமைச்சுப் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நாட்டில் இன்று நிதிப் பிரச்சினை இருந்திருக்காது.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் ஐந்து ஆண்டுகளில் நாட்டில் வறுமையை இல்லாதொழிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.