ஐக்கிய தேசியக் கட்சியினால் தனித்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டும் தனித்து போட்டியிட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

விரிவான கூட்டணி உருவாக்க கூடிய அதற்கான செயற்பாட்டு திட்டமொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அனைத்து நபர்களுக்கும் தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டு கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றி நிர்ணயம் செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு அடிப்படை மட்டும் போதுமானதல்ல எனவும் நட்பு சக்திகளையும் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள அனைத்து நபர்களிடமும் வெற்றியீட்டக் கூடிய வழிமுறைகளை முன்மொழியுமாறு தாம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.