புலனாய்வுத்துறை அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்

Report Print Ajith Ajith in அரசியல்

தேசிய பாதுகாப்பு கருதி இலங்கையின் தேசியப் புலனாய்வுத்துறை அரசியலில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

செய்தி சேவையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டில் இன்று புலனாய்வுத்துறை அரசியலுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. இதனால் தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுகிறது.

எனவே தேசியப் புலனாய்வுத்துறை அரசியலில் இருந்து விடுதலை பெறவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க வேண்டியது அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் சமூகம் என்பனவாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers