ரணில் எடுத்துள்ள தீர்மானம்! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், பொதுஜன பெரமுனவும் கூட்டணி சேராது?

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கபீர் ஹாசிம் மற்றும் அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க ஆகியோர் இடைநிறுத்தப்படுவதும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி சேராது என்பனவுமே வரப்போகும் புதுச்செய்திகளாக இருக்கின்றன.

கட்சியின் தலைமைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற காரணத்துக்காக கபீர் ஹாசிம், அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரை இடைநிறுத்துவது என்று தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இதில் ஹாசிம் தலைவருக்கு எதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எனவே அவருக்கான தண்டனை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய இரண்டு அமைச்சர்களும் ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டால் மாத்திரமே தாம் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கலாம் என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிபந்தனையை ஏற்க மஹிந்த தரப்பு தயாராக இல்லை, எனவே அந்த இரண்டு கட்சிகளும் பேச்சு நடத்திவரும் கூட்டணிக்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன.