தேசிய வேட்பாளர் ஒருவரை பரிந்துரை செய்ய சபாநாயகர் முனைப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தேசிய வேட்பாளர் ஒருவரை பரிந்துரை செய்ய சபாநாயகர் கரு ஜெயசூரிய முனைப்புக்காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடனேயே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் நிபந்தனையுடனேயே இந்த தேசிய வேட்பாளர் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இந்த யோசனைக்கு ஜே.வி.பியும் ஆதரவளிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தரப்பினர் நம்புவதாக தெரியவருகிறது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க ரணில் முன்வைத்த யோசனையை மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே நிராகரித்து விட்டார்.

தமது கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது சாத்தியமாகாது என்றும் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers