மஹிந்த தரப்பின் சிலர் நன்றி மறந்து செயற்படுகின்றனர்! ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இடைநிலைத் தலைவர்கள் நன்றி மறந்து செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

உயர்மட்ட தலைவர்கள் மற்றும் கடைநிலை அங்கத்தவர்கள் நன்றி உணர்ந்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ரத்தினபுரியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது உறுப்புரிமையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரே பாதுகாத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரது ஒரு கடிதமே பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களது நாடாளுமன்ற உறுப்புரிமையை தக்க வைத்துக் கொண்டது.

கட்சிக்கும், கட்சியின் அங்கத்தவர்களுக்கும் அநீதி இழைக்கப்படாத அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணங்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மலினப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளர் போட்டியிட்டாலும் அவருக்கு சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றியீட்ட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.