ஜனாதிபதி மைத்திரியின் எச்சரிக்கை!

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவமதிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக, கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில், சகலரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின், மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.