மணி சின்னத்தை கைவிடும் ஜே.வி.பி.

Report Print Kamel Kamel in அரசியல்

ஜே.வி.பி கட்சி மணி சின்னத்தை கைவிட்டு புதிய சின்னத்தில் இம்முறை தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி மணி சின்னத்தில் போட்டியிடாது என அவர் கலேவல புவக்பிட்டிய பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

பல தன்னார்வ அமைப்புக்கள் ஜே.வி.பியுடன் இணைந்து கொண்டுள்ளதனால் பொதுவான ஓர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் ஜனாதிபதியாக தெரிவானாலும் நிச்சயமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மார்ச் மாதமளவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி என்ற அரசியல் அமைப்பின் ஊடாகவே ஜே.வி.பி தேர்தலில் போட்டியிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் கௌரவ என அழைப்பவர்கள் முட்டாள்கள் மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.