பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை

Report Print Kamel Kamel in அரசியல்

சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையின் அடிப்படையில் பாலித தெவரப்பெரும மற்றும் ஐந்து பேர் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிரதி அமைச்சர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மத்துகம நெபொட பகுதியில் நீதிமன்றின் உத்தரவினையும் மீறி இறந்த நபர் ஒருவரின் சடலத்தை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்ததாக பிரதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரின் சடலத்தையே இவ்வாறு பிரதி அமைச்சர் முன்வந்து நல்லடக்கம் செய்திருந்தார்.

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே பிரதி அமைச்சர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.