ஐக்கிய தேசிய கட்சியின் அறிவிப்பிற்காக காத்திருக்கும் சுதந்திர கட்சி!

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி தமது வேட்பாளரை அறிவிக்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமது வேட்பாளரை அறிவிப்பதற்கான காலத்தினை நீடிக்கும் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க குறித்த தகவலை சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் யோசனைக்கு அமைய ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாகவும் அதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியினர் வேட்பாளரை நிறுத்தும் வரை தாம் பொறுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் தாமரை மொட்டினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.