கவலைக்கிடமாக மாறியுள்ள ஐதேகவின் நிலை

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்வதில் இருக்கும் இழுபறி நிலை காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி தூரமாகி செல்கின்றது என ஐதேகவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்குரியது, கட்சிக்குள்ளால் பேசி வேட்பாளரை தெரிவு செய்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வை காண முடியும்.

கட்சியின் செயற்குழு என்பது மக்களின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இடம், எதிர்தரப்பினருக்கு முகம் கொடுப்பதற்காக கட்சி ஒற்றுமையாக ஒரு கட்சியாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.