சஜித் அணியை தொடர்ந்து ரணிலை சந்திக்கும் சம்பந்தன் குழுவினர்

Report Print Ajith Ajith in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ சார்பான அணியினருக்கும், த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டால் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வுகளை முன்வைப்பார் என்ற அடிப்படையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளைய தினம் ரணிலை சந்திக்கவுள்ளது.

மேலும், தம்மை சந்திக்குமாறு ரணில் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.