புதிய கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கும் மற்றுமொரு ராஜபக்ஸ

Report Print Gokulan Gokulan in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மற்றும் ஏனைய சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அனுசரணையுடன் அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணிக்கு ஜனாதிபதி நேரடியாக எந்தவித ஆதரவினையும் வழங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தைகளுக்கு ஜனாதிபதியின் புதல்வன் தஹம் சிறிசேன மற்றும் விஜேதாச ராஜபக்ஸவின் புதல்வன் ரகித்த ராஜபக்ஸ ஆகியோரும் கலந்துகொண்டதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Latest Offers