மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிசார்ந்த செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுத்து வருவதாகவும், மாநகரசபை உறுப்பினர்களின் சிறப்புரிமையினை மீறி வருவதாகவும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி உறுப்பினர் ஆகியோர் இன்று பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.

இதன்போது மாநகரசபை உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் கே.காந்தராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தம்மை ஒட்டுக்குழு என விமர்சனம் செய்வதாகவும், ஆனால் அவர்கள் ஒட்டுக்குழுக்களுடன் இணைந்தே ஆட்சி செய்கின்றார்கள் என்பதை மறந்து போவதாகவும் ஈபிடிபியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.