தெற்காசியாவின் அதிசயமான தாமரை கோபுரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

Report Print Vethu Vethu in அரசியல்
3139Shares

தெற்காசியாவின் அதிசயமாக கருதப்படும் தாமரை கோபுரத்தை நிர்மாணிக்கும் பணிக்காக பெருந்தொகை பணத்தை வழங்கிய நிறுவனம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது தாமரை கோபுர நிர்மாணப் பணிக்காக 18 மில்லியன் அமெரிக்க டொலர் முற்பணமாக, சீன நிறுவனம் ஒன்று கொடுத்திருந்தது.

Aerospace Long-March International Trade எனும் பெயர் கொண்ட அட்ரஸ் இல்லாத சீன ஷெல் கம்பனியினால் இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. எனினும் கம்பனி தொடர்பில் ஆராயந்த போது அவ்வாறான கம்பனி ஒன்றே இல்லை என தெரிய வந்துள்ளது.

பிரமாண்டமான இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்ற கடனை வருடத்திற்கு 240 கோடி ரூபா வீதம் 10 வருடங்களுக்கு நாம் செலுத்த வேண்டும்.

ஆனாலும் நீர்ப்பாசனம், வீடமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் மகத்தான தொழில்நுட்ப மரபை இலங்கை கொண்டுள்ளது. தொலைத்தொடர்பாடல், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக இந்த கோபுரத்தை குறிப்பிட முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.