கோத்தபாயவின் வெற்றியை விரும்பாத மகிந்த! ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே உயர் பதவிகளில் அமர்த்தப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தில் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வெற்றியீட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நோக்கமாகவும் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

லோ லெவல் வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டில் களவு, மோசடிகள் விரயம் போன்ற காரணிகளினால் மட்டும் ராஜபக்சக்கள் தோற்கடிக்கப்படவில்லை எனவும் வெள்ளை வான்களும் ஓர் முக்கிய காரணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவனால் அமைச்சுக்களின் செயலாளர்களாக ஓய்வு பெற்றுக் கொண்ட இராணுவ ஜெனரல்களே பதவி வகிப்பாளர்கள் என தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவினாலும் கோத்தபாயவை கட்டுப்படுத்துவதற்கு முடியாது எனவும் எனவே மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய தோற்கடிக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது தலைமைத்துவத்தை பாதுகாக்கவும் எதிர்காலத்தில் புதல்வருக்கு சந்தர்ப்பம் வழங்கவும் கோத்தபாய ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமானது என்பதே மகிந்தவின் நிலைப்படாக அமைந்துள்ளது தெரிவித்துள்ளார்.

கோத்தபாய வெற்றியீட்டினால் மகிந்தவின் புதல்வரினால் அரியாசனம் ஏற முடியாது எனவும் இதனால் மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்ட வேண்டுமென்றே மகிந்த தரப்பு விரும்புகின்றது எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.