நான் நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் - சஜித் உறுதி

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிடப் போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பகுதியில் இன்று அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ரணசிங்க பிரேமதாசவின் புதல்வாரன நான் நிச்சயமாக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். அதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் தெரிவு குறித்து இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு தாம் பிதமரிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக காலம் தாழ்த்துவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.