மஹிந்தவுக்கு இன்று பெரும் ஏமாற்றம்!

Report Print Vethu Vethu in அரசியல்

தாமரை கோபுரத்தின் திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிரமாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

எனினும் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை என, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது தாமரை கோபுர நிர்மாணிப்பு தொடர்பான, உடன்படிக்கை சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் பிரதான கர்த்தாவான மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தகவல் தொடர்பு, கல்வி மற்றும் நாட்டின் வளர்ச்சி போன்ற துறைகளுக்கு ஒரு சேவையை வழங்குவதற்காக இந்த கோபுரம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, ஆரம்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers