விக்கி என்னதான் ஆட்டம் போட்டாலும் எனக்கே ஆதரவு - கோத்தபாய நம்பிக்கை

Report Print Rakesh in அரசியல்

போராட்டங்கள், எழுச்சிப் பேரணிகள் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என்னதான் ஆடட்டம் போட்டாலும் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னையே முழுமையாக ஆதரிப்பார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கின்றதென முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் எல்லோருடனும் பேச்சு நடத்துவேன்.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர் நிறைவேற்றிய தீர்மானங்கள், அவரின் பல குறிக்கோள்கள் தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமற்றனவாக இருக்கின்றன.

எனினும், தமிழ் மக்கள் நலன் சார்ந்து அவர் முன்வைக்கின்ற நிபந்தனைகளில், நாட்டின் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத விடயங்களை நிறைவேற்றுவோம்.

இந்த உறுதியை நான் வழங்குகின்றேன். அவர் எங்களுக்கு ஆதரவு வழங்குவார் என்ற முழு நம்பிக்கையுடன் இதனைச் சொல்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers