மகிந்தவுக்கும் மொட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்! பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கின்ற கேந்திரமாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயற்படுகிறது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எமது கட்சிக்கும் இடையில் 08 கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்களை தொடர்ந்தும் முன்னெடுக்க நாங்கள் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் எமது கட்சிக்கும் இடையில் 08 கட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தப் பேச்சுக்களை தொடர்ந்தும் முன்னெடுக்க நாங்கள் தயார். ஆனால் இது வெற்றியளிக்க வேண்டும் என்றால் அடிப்படை அவசியமொன்று உள்ளது.

நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு அல்ல, ஜனாதிபதி தேர்தலுக்கே முகங்கொடுக்கப் போகின்றோம். தொகுதி அமைப்பாளர் பதவி, நாடாளுமன்ற ஆசனத்திற்கான வேட்புமனு சந்தர்ப்பம் என்பதனை இப்போது தூக்கிப்பிடித்தால் உண்மையான பிரச்சினை திரிபுபடுத்தப்பட்டுவிடும்.

இவற்றை இப்போதல்ல, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே கவனத்திற்கொள்ள வேண்டும். ஆனாலும் இவற்றை இப்போது பேசினால் பேச்சுவார்த்தையை துருவப்படுத்தும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.

சின்னம் குறித்த பிரச்சினையும் இதுபோன்றதுதான். நாடாளுமன்ற தேர்தலுக்கே தவிர, ஜனாதிபதி தேர்தலில் சின்னம் என்பது முக்கியமல்ல. மொட்டு என்பது மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகும்.

மகிந்தவுக்கும் மொட்டிற்கும் இடையே நெருங்கிய தொடர்புள்ளது. தீர்க்கமான தேர்தலை சந்திக்கும்போது சின்னம் குறித்த பிரச்சினை ஏன் என்பதே எமது கேள்வியாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் சின்னம் குறித்து பேச்சு நடத்தி சிறந்த தீர்வுக்குவர நாங்கள் தயார். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சின்னம் முக்கயமல்ல” எனவும் அவர் கூறியுள்ளார்.

Latest Offers