மேலும் பல விடயங்கள் அம்பலமாகலாம்! மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த உள்ளிட்டவர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், விரைவில் மைத்திரி தரப்புடன் கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டுமென மஹிந்த ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாமரைக் கோபுர அங்குரார்ப்பண நிகழ்வில் மஹிந்த தரப்பு பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக மைத்திரி விமர்சனம் செய்திருந்தார்.

எனினும், இந்த விமர்சனங்களைக் கண்டு கோபம் கொள்ளாது கூடிய விரைவில் மைத்திரியுடன் கூட்டணி சேர்வதற்கான முனைப்புக்களை மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மைத்திரியுடன் முரண்பட்டுக் கொண்டு மேலும் ஆத்திரமூட்டினால் இன்னும் பல்வேறு விடயங்கள் அம்பலமாகக் கூடும் என மஹிந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார முனைப்புக்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் முடிந்தளவு சீக்கிரம் ஜனாதிபதியுடன் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொள்ள வேண்டுமென அவர் பரிந்துரை செய்துள்ளார்.

தந்திரோபாயமான முறையில் அணுக வேண்டிய பிரச்சினைகளின் போது தனிப்பட்ட நபர்களின் பிம்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்படுவது முட்டாள்தனம் என மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் ரீதியான அனுபவம் தமக்கு அதிகம் இருப்பதாகவும் தமது சொற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.