எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு? அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என நினைப்பதாகவும், அவருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கூடிய அக்கறை இருப்பதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் குறித்தே நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். பிரபலமான வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுவார் என நினைக்கின்றேன்.

எனினும் அது தொடர்பாக இன்னும் இறுதி தீர்மானம் கிடைக்கவில்லை. இந்த வாரம் இது தொடர்பான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

இதன் பின்னரே நாங்கள் தீர்மானம் ஒன்றை எடுப்போம். ஏனைய கட்சிகளுடன் இணைந்தே எங்களது தீர்மானத்தை எடுப்போம். சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்படுவார் என நினைக்கின்றேன் எனவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.