சம்பிக்க, ராஜித, அர்ஜூன ஆகியோரிடம் பெரிய எதிர்ப்பு இல்லை! சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரிடம் பாரதூரமான எதிர்ப்பு எதுவும் இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் குறிப்பிடுகையில்,

பிரச்சினைகள் இருக்குமாயின் பேச்சுவார்த்தை மூலம் இணக்கமாக தீர்த்து கொள்ள சிறந்த சந்தர்ப்பம் இருக்கின்றது.

முதாவது, இரண்டாவது, மூன்றாவது என ஜனநாயகத்திற்கே முதலிடம். வெளிப்படை தன்மையுடன் செயற்பாட்டு ரீதியான தீர்மானத்தை எடுக்கக் கூடிய முறைகள் உள்ளன.

அப்போது மக்களின் நிலைப்பாட்டுக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers