மூன்று எம்.பிக்கள் பதவியேற்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூன்று பேர் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

டி.பி. ஹேரத், மனோஜ் சிறிசேன மற்றும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சாந்த பண்டார ஆகியோரே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சந்திரசிறி கஜதீர மற்றும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு முறையே டி.பி. ஹேரத், மனோஜ் சிறிசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார மீண்டும் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

Latest Offers