குண்டு துளைக்காத வாகனங்களை இறக்குமதி செய்ய மாட்டேன்! சஜித் வழங்கியுள்ள உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்காலத்தில் தெரிவு செய்யப்படும் பல ஜனாதிபதிகளுக்கு அளவில் போதுமான குண்டு துளைக்காத வாகனங்கள் நாட்டில் இருப்பதால், மக்களின் பணத்தை செலவிட்டு, புதிதாக குண்டு துளைக்காத வாகனங்களை இறக்குமதி செய்ய போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹோமாகமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மவுண்ட் கிளிபேர்ட் வீடமைப்புத் திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்கி, அனைத்து மக்களுக்கும் நன்மையை வழங்கும் நூதனமான புரட்சிகர அபிவிருத்தி யுகத்தை நாட்டில் உருவாக்குவேன்.

நாட்டின் கொள்கையை வகுக்கும் போதும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உருவாக்கும் போது பொது நோக்கத்தில் இருந்து சகல மக்களின் நன்மைகளுக்காகவும் தீர்மானங்ளை எடுக்க வேண்டும்.

அரச நிர்வாகத்துறையில் செலவினங்களை முகாமைத்துவம் செய்ய போதுமான வாய்ப்புகள் உள்ளன. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை மக்களின் நலன்களுக்காக மாத்திரமே செலவிட தான் நடவடிக்கை எடுக்க போவதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.