ஜனாதிபதியின் குற்றச்சாட்டு குறித்து கோப் குழு விசாரிக்க வேண்டும்: விஜித ஹேரத்

Report Print Steephen Steephen in அரசியல்

தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதில் 200 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஜனாதிபதி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து கோப் குழு ஊடாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கோப் குழுவுக்கு அழைத்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.

ஜனாதிபதி கூறுவது போல், பணம் காணாமல் போயிருந்தால், அதற்கு பொறுப்புக் கூற வேண்டிய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட நான்கு ஆண்டுகள் ஆனதும் சிக்கலுக்குரியது. இது சம்பந்தமாக ஜனாதிபதியின் மீது கடும் விமர்சனங்கள் இருப்பதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்

Latest Offers