தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சுதந்திரக் கட்சி தீர்மானத்தை எடுக்கும் - தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் ஒன்றை எடுக்கும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கட்சி செயலாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பணியாற்றும் தேவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இருந்தாலும் சில நபர்களின் தேவையற்ற செயற்பாடுகள் காரணமாக இணக்கத்திற்கு வர முடியாதுள்ளது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறுதி வரை முயற்சிக்கும்.

இரண்டு கட்சிகளும் இணைவதை விரும்பாத பொதுஜன பெரமுனவில் இருக்கும் சிலர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். பிரதானமாக சின்னம் தொடர்பாக இருந்து வரும் கருத்து முரண்பாடுகளின் பின்னர், அதற்கு அப்பால் சென்ற விடயங்களை எதிர்கொள்ள முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.