பிரச்சினைகள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டும் என கூறுகிறார் வடக்கு ஆளுநர்

Report Print Sujitha Sri in அரசியல்

மனிதன் இப்பொழுது விண்தொட்டிருக்கின்றான் ஆனால் மண்தொடாத மனிதன் எப்போதும் விண்தொட்டதில்லை என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2019 இற்கான விவசாயக்கண்காட்சி இன்று ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

விவசாயிகள் சேற்றிலே இறங்கினால் தான் நமக்கு சோறு உண்டு, நீர் உண்டு. விவசாயிகள் வேர்வை சிந்தாவிடின் எமக்கு ஆகாரமில்லை.

எமது விவசாயிகளுக்கு நீர்ப்பிரச்சனை மானியப்பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதனை குறித்து நாம் தீவிரமாக ஆராய்தல் வேண்டும்.

அரசியல், சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் எனும் அடிப்படையில் நம் உணவும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

உணவு சுதந்திரமாக இருக்கும் சமுதாயத்தினால் ஏனைய விடயங்கள் தொடர்பில் யோசிக்கும் சக்தியும், புத்தியும் ஏற்படும் என கூறியுள்ளார்.

வடமாகாணத்தின் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு இதன்போது ஆளுநரினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விவசாய கண்காட்சி எதிர்வரும் 20ஆம் திகதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers