ஜனாதிபதி தேர்தல்! பலத்த சவால்களை எதிர்நோக்கியுள்ள ரணில்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பலத்த சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எப்.பி செய்தி சேவை இதனை தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

எனினும் அதற்கு ரணில் விக்ரமசிங்க இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தநிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பம் வெளியிட்டுள்ளார்.

போட்டியிட்டு வெற்றி பெற்றால் உடனடியாக தாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்க தற்போது இருமுனைப் போட்டியை எதிர்நோக்குவதாக ஏ.எப்.பி வெளியிட்டுள்ள செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.