மட்டக்களப்பு மாநகர சபையில் எந்த அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை!

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு மாநகர சபையில் எந்த அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும், மாநகரசபையின் அபிவிருத்திகள் தொடர்பிலேயே பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

பாதீடானது மாநகரசபையின் முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுவதாகவும், ஆனால் கிடைக்கும் வருமானத்தினை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநகரசபையினால் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக நிதிகளை ஒதுக்க முடியாது. வட்டார ரீதியாகவே அபிவிருத்திகளை செய்யமுடியும்.

சில உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுகள் ஊடாக தமது பகுதிக்கான வேலைத்திட்டங்களுக்கு நிதிகளை கொண்டுவந்து அபிவிருத்திகளை செய்யும் போது அதற்கு மாநகரசபை ஆதரவுகளை வழங்குகின்றது.

அது தவிர மட்டக்களப்பு மாநகரசபையில் எந்தவித அரசியல் ரீதியான செயற்பாடுகளும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.