விரிவான கூட்டணியில் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி! அகில விராஜ்

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தெரிவு எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விளக்கம் அளித்துள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை விளக்கியுள்ளார்.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளும் முரண்பாட்டு நிலைமை உருவாகியிருப்பதாக வெளியிடப்படும் செய்திகளில் உண்மையில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விரிவான ஓர் கூட்டணி ஊடாக போட்டியிட உள்ளதாகவும் இது குறித்து இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருவரே என்பதில் இணப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.

ஜனநாயக ரீயிலும் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவும் இவ்வாறு வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.

எமது கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் ஏனைய தரப்பினரது ஒத்துழைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை வெற்றியீட்டச் செய்ய அனைவரும் இணைந்து செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.