ரணில், சஜித், கரு தவிர்ந்து சவால்மிக்க ஒருவர் தேர்தலில் களமிறங்கும் சாத்தியம்!

Report Print Murali Murali in அரசியல்
789Shares

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எவர் களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்காக சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவருடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுகிறது. ஐ.தே.க சார்பில் எவர் களமிறங்கினாலும் எமக்கு சவால் அல்ல.

ரணில், சஜித் மற்றும் கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதற்காக சாத்தியக் கூறுகளும் காணப்படுகிறது, எவ்வாறாயினும் அவற்றை நாம் பொருட்படுத்தப் போவதில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதாக இருந்தால் தான் போட்டியிடுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.

தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்று குறிப்பிடுவது வெறும் தேர்தல் பிரசாரமேயாகும். தற்போதைய ஜனாதிபதியும் இதனையே குறிப்பிட்டு ஆட்சிக்கு வந்தார்.

ஆகவே இவ்விடயத்தில் மக்கள் உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.