நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதிவியை நீக்க முழுமையான ஆதரவு! எம்.ஏ.சுமந்திரன்

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிப்போம். அதனை இப்போது முன்னெடுத்தாலும் ஆதரவு கொடுப்போம்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான கொள்கையாக இருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக கடந்த காலங்களில் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

Latest Offers