சஜித் தொடர்பில் லால்காந்த வெளியிட்டுள்ள விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதை தவிர எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்க மக்கள் விடுதலை முன்னணி தயாரில்லை என அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

தற்போது தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் பெயர்கள் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியுமா என்பது குறித்து வாத விவாதங்கள் இல்லாமல் இல்லை. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளரை வெற்றி செய்யும் நோக்கமே எமக்கு உள்ளது. வேறு ஒருவரை வெற்றி பெற செய்யும் நோக்கம் இல்லை.

கோத்தபாயவை தோற்கடிக்க அனைவரும் கரு ஜயசூரியவை சுற்றி அணித்திரள வேண்டும் என்ற நிலைப்பாடும் உருவாக்கப்பட்டு வருகிறது. ரணில் அல்லது கரு வேட்பாளராக போட்டியிட்டால், சஜித் பிரேமதாசவுக்கு ஜனபாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தைரியம் இருக்குமா என்ற சிக்கலும் உள்ளது.

சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பகுதியினருடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தனியான கூட்டணியை ஏற்படுத்த போகிறார் என்ற கதையும் பேசப்படுகிறது எனவும் லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers