சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம்

Report Print Mubarak in அரசியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்காக 50 மில்லியன் அமெரிக்க டொடலர்களை வழங்குகின்றது சவூதி அரசாங்கம்.

அதற்கான ஒப்பந்தம் இன்றைய தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக நிதி உதவி கோரி அதற்கான ஆவணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில் கிண்ணியா, மூதூர், தோப்பூர், புல்மோட்டை போன்ற வைத்தியசாலைகள் உட்பட மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான காலித் சுலைமான் அல் ஹுதைரி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் அல் ஹார்தி, நிதி அமைச்சின் செயலாளர் சமரதுங்க, பொறியலாளர் பெந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.