மைத்திரியின் குற்றச்சாட்டால் சீன அரசுக்கே அதிகமான பாதிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க முற்பணமாக கொடுத்த 200 கோடி ரூபாய் காணாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடாக கூற வைத்தமை மூலம் சீன அரசை தாக்கும் சதித்திட்டம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுர நிர்மாணத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஒரே வங்கிக் கணக்கிலேயே பணம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வங்கிக் கணக்கு சீன அரசாங்கத்தின் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது.

ஜனாதிபதி சுமத்திய குற்றச்சாட்டு காரணமாக சீன அரசுக்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசாங்கம் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கின்றேன்.

தாமரை கோபுரம் திட்டத்திற்கு சீனாவின் எக்சீம் வங்கியே கடன் வசதிகளை வழங்கியது. அந்த வங்கி முகவரி இல்லாத, பதிவு செய்யப்படாத, எவரும் அறியாத நிறுவனத்திற்கு கடனை வழங்காது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.