ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் கொண்ட குழு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எனினும், ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக கூறி சஜித் பிரேமதாச சில இடங்களில் வெற்றிகரமான கூட்டங்களை நடத்தியுள்ளார். அத்துடன் தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சஜித் நேற்று கூறியிருந்தார்.